பூலாங்குளம் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள பூலாங்குளம் ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் திருக்கோவிலில் திருமால் பூஜை திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி நேற்று மதியம் குற்றாலத்தில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து நேற்று இரவு ஏராளமான பெண் பக்தர்கள் விளக்கு பூஜையில் பங்கேற்று 108 திருவிளக்கு பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து டிவி புகழ் மங்கை வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
Next Story

