தென்காசியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

தென்காசியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
X
கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதற்கிடையே தென்காசி நகராட்சியில் உள்ள 25 வார்டுகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று நகராட்சி தலைவர் ஆகியோர் சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டனர். அதன்படி, நகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் நகராட்சியில் உள்ள 25 வார்டுகளில் சுழற்சி முறையில் வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Next Story