கந்தம்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி.

கந்தம்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி.
X
கந்தம்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர், பிப்.12: நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே வீரக்குட்டையை சேர்ந்த கருப்பண்ண கவுண்டர் மகன் சுப்பிரமணியம் என்பவரது விவசாய தோட்டத்தில் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த நாகேஷ் (50) அவரது மனைவி மாதேவி என்பவரும் கடந்த 6 வருடங்களாக சுப்பிரமணியம் ரிக் வண்டியில் நாகேஷ் தொழிலாளி யாகவும் அவரது மனைவி தோட்டத்திலும் வேலை செய்து வசித்து வந்தனர். சம்பவத்தன்று நாகேஷ் தோட்டத்தில் கிடந்த மூன்று நீளமான இரும்பு கம்பி துண்டுகளை எடுத்து ஒன்றன்பின் ஒன்றாக இணைத்து உயரம் எவ்வளவு உள்ளது என்பதை பார்க்க தூக்கி நிறுத்திய போது உயர்மின் அழுத்த மின்சார கம்பியில் பட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். உடனடியாக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத் திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story