சங்கரன்கோவிலில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நெசவாளர் காலனி சேர்ந்தவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகத்தை கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நெசவாலையில் பணிபுரிந்த போது அங்கு வந்த காவல்துறை அத்து மீதி எந்தவித காரணமும் இன்றி கைது செய்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் இன்று மாலை இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி. பி ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக இந்து முன்னணியினர் அறிவித்திருந்தனர். இந்து முன்னணியின் போராட்ட அறிவிப்பால் சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்து முன்னணியினர் போராட்டத்திற்கு செங்குந்தர் முன்னேற்ற சங்க செயலாளர் மாரிமுத்து தலைமையில் ஏராளமானவர்கள் குவிந்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை சங்கரன்கோவில் போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Next Story

