திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம்*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அலுவலகம் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் திருப்பத்தூர் கிளை சார்பாக அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் முக்கிய கோரிக்கைகளாக பேராசிரியர்களுக்கான பணி மேம்பாடு, நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனே வழங்கிட வேண்டும், அரசு கல்லூரி பேராசிரியர்களையும் அரசு உதவி பெறும் பேராசிரியர்களையும் பாரபட்சமாக நடத்தும் உயர்கல்வித்துறையையும் தமிழக அரசையும் கண்டித்தும் பணி மேம்பாடு, நிலுவை, பணப்பயன்,ஆகியவற்றினை உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story



