சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சென்னிகுளத்தை சேர்ந்த செல்லத்துரை மனைவி ராமலட்சுமி (75) என்ற மூதாட்டி ஊரில் அருகே கிணற்று அருகாமை நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத இன்று மாலையில் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்டு மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

