ஆழ்வார்குறிச்சி வன்னியப்பருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது

ஆழ்வார்குறிச்சி வன்னியப்பருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது
X
வன்னியப்பருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைல நாதர் பரம கல்யாணி அம்பாள் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று தெப்ப திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து இன்று பாப்பான்குளம் செல்லும் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற வன்னியப்பர் கோவிலில் சுவாமி வன்னியப்பருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது . இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story