தைப்பூசத் திருநாள் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு 

தைப்பூசத் திருநாள் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு 
X
தைப்பூசத் திருநாள் தாராபுரம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு 
தாராபுரம் சுப்பிரமணிய சாமி கோவிலில் நேற்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடை பெற்றது. கொடுமுடியில் இருந்து முருகபக்தர்கள் 108 தீர்த்த குடங்கள் எடுத்துக் கொண்டு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வேல் வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர் சுப்பிரமணிய சாமிக்கு பால், தயிர், பன்னீர், திரு மஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு பூஜைகள் செய்யப்பட்டு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதே போல் சோளக்கடை வீதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் கோவில். உப்பு பாளையம் சாலை பாலமுருகன் கோவில், எல். கே. சி நகர் முருகன் கோவில். சுப்பிரமணிய கவுண்டன் வலசு வேல்முருகன் கோவில், புஷ்பகிரி வேலாயுத ஸ்கந்தசாமி கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
Next Story