பழக் கன்றுகளுக்கான பங்குத் தொகையை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தன்னுடைய பணத்தில் அளித்து முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார்.*

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் சிறு குறு விவசாயிகள் 200 பேருக்கு அரசு மானிய விலையில் வழங்கும் வேளாண் பொருட்கள் மற்றும் பழக் கன்றுகளுக்கான பங்குத் தொகையை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தன்னுடைய பணத்தில் அளித்து முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவதானம் அரசு விதைப் பண்ணையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ தங்கபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் அரசாங்கம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கக்கூடிய பொருட்கள் மற்றும் சலுகைகள் குறித்தும், சலுகைகளை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் விளக்கினர். இதனைத் தொடர்ந்து நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 30 கிராமங்களில் வசிக்கும் 200 சிறு குறு விவசாயிகளுக்கு, தமிழக அரசு வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் மானிய விலையில் வழங்கும் நெல்லுக்கான சல்பேட் உரம் 500 கிலோ, 5 பூச்சி மருந்து தெளிப்பான்கள், மண்புழு உரம் தயாரிக்க பயன்படும் 34 பைகள், நுண் உரங்கள் மற்றும் இடு பொருட்கள் 15 பேருக்கு மற்றும் ஆயிரம் பழக்கன்றுகளுக்கான பங்கு தொகை ரூ. 1 லட்சத்தை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தனது பணத்தில் இருந்து செலுத்தி 200 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார்.
Next Story

