சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை பௌர்ணமியே முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம்.*

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை பௌர்ணமியே முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம்.*
X
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை பௌர்ணமியே முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம்.*
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை பௌர்ணமியே முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் தை பௌர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மழை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம்,மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளனர். தை பௌர்ணமியே முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர்.இந்த கோவிலுக்கு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு மலையேறி செல்ல அனுமதி என்பது வனத்துறையினர் வழங்கியுள்ளதால் அதிகாலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி வழங்கினார்.மலையேறி செல்லக் கூடிய பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்கின்றாரா? என வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை தீவிர சோதனை செய்த பின்னரே பக்தர்களை அனுமதித்தனர்.மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார்,வனத்துறையினர் மற்றும் தீயணைத்துறையினர் தாணிப்பாறை அடிவாரப்பகுதியிலும் மலைக்குச் செல்லக்கூடிய நீரோடைப் பகுதிக யிலும்,கோவில் வளாகப் பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.மேலும் பக்தர்களின் வசதிக்காக தேனி, மதுரை திருநெல்வேலி ராஜபாளையம் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.மேலும் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி என்றும் பக்தர்கள் நடந்து செல்லக்கூடிய மலைப்பகுதிகளில் உள்ள நீரடைகளில் இறங்கி குளிப்பதற்கும் பக்தர்கள் இரவில் தங்குவதற்கும் அனுமதி கிடையாது என பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்திருந்தனர்.மேலும் பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Next Story