பல்லடம் அருகே பட்டப்பகலில் இரண்டு வீடுகளில் திருட்டு

பல்லடம் அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 9 சவரன் நகை திருட்டு-மர்ம நபர்கள் கைவரிசை போலீசார் விசாரணை.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எலவந்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்திரகுமார் மற்றும் கிருஷ்ணா காந்த். சந்திரகுமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில்,நேற்று அவர் அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது மர்மநபர்கள் பிற்பகல் நேரத்தில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த நான்கு சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகாந்த் என்பவர் தனது குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இருந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர். தகவல் அறிந்து வீடு திரும்பிய சந்திரகுமார் மற்றும் கிருஷ்ணகாந்த் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story