ஜெயங்கொண்டம் சௌடாம்பிகா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் முதலாம் ஆண்டு ஆண்டு விழா

X
அரியலூர், பிப்.12- ஜெயங்கொண்டம் செளடாம்பிகா வித்யாலயா பள்ளி (CBSE) முதலாம் ஆண்டு ஆண்டுவிழாவில்,ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன், இந்திய பாதுகாப்புத்துறை(DRDO) முதுநிலை விஞ்ஞானி டில்லிபாபு ஆகியோர் சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில் செளடாம்பிகா கல்வி குழுமத் தலைவர் இராமமூர்த்தி, சௌடாம்பிகா கல்வி குழும செயலாளர் செந்தூர்செல்வன், பள்ளி முதல்வர் சித்ராராமன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள்,பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story

