ராமநாதபுரம் மக்கள் திட்ட முகாம் நடைபெற்றது
ராமேசுவரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் 133 பயனாளிகளுக்கு 40.14 லட்சம் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தெற்கு கரையூர் பகுதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு துறை சார்பில் 133 பயனாளிகளுக்கு 40.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாச்சியர் ராஜ மனோகரன்,நகர் மன்ற தலைவர் கே.இ.நாசர்கான்,துணைத்தலைவர் தெட்சிண மூர்த்தி, நகராட்சி ஆணையர் கண்ணன்,சமூக நலத்துறை வட்டாச்சியர் அப்துல் ஜாப்பார் நகர் மன்ற உறுப்பினர் அர்ச்சணன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story




