ராமநாதபுரம் தைப்பூசம் முன்னிட்டு தப்ப தெரியல நடைபெற்றது
ராமநாதபுரம் தைப்பூசத்தை முன்னிட்டு இராமேஸ்வரம் இராமநாதசாமி திருக்கோவிலில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு ஆறு கால பூஜைகள் நடைபெற்றன , அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டு இராமநாதசாமி ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி லட்சுமண தீர்த்த குலத்திற்கு வந்தடைந்தனர், அதைத் தொடர்ந்து தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுவாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர், அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாதாரணைகள் நடைபெற்றது, தெப்பத் திருவிழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி அம்பாளை தரிசித்து சென்றனர்.
Next Story





