வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு!

X
வாலாஜா நகரில் தற்காலிக கடை வைத்து வியாபாரம் செய்யும் மற்றும் வாகனங்களில் விற்பனைக்கு வரும் வியாபாரிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக பல வியாபாரிகள் புகார் செய்கிறார்கள். அது மட்டுமின்றி வாலாஜாவுக்கு வரும் வேன், லாரிகளுக்கும் சுங்க கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு முறையான ரசீதுகளும் வழங்குவதில்லை. இதனால் பல வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். தரைக்கடை வைத்திருப்பவர்களிடமும், சைக்கிளில் பழம், கீரை, தயிர், மோர் விற்பவர்கள் மற்றும் தள்ளுவண்டி காரர்களுக்கும் இதே நிலைதான். எனவே தாங்கள் நகராட்சியில் ஏலம் எடுத்தவர்களிடம் நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து, கட்டணத்திற்குண்டான ரசீது வழங்குமாறு உத்தரவிட வேண்டும். நகராட்சி நிர்ணயித்த கட்டண விகிதத்தை நகராட்சி அலுவலக நோட்டீஸ் போர்டில் ஒட்ட வேண்டும்.வியாபாரிகள் நலச்சங்கத்திற்கு சுங்க கட்டண விவரங்கள் நகல்கள் தர வேண்டும் என வாலாஜா வியாபாரிகள் நல சங்க நிர்வாகிகள் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.
Next Story

