காவேரிபாக்கத்தில்விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் முகாம்!

X
காவேரிப்பாக்கம் வேளாண்மைத்துறை சார்பில் கடந்த 10-ந் தேதி முதல் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் முகாம் காவேரிப்பாக்கம் வட்டார அனைத்து கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், கணினி சிட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றை எடுத்து சென்று முகாமில் பதிவு செய்து அடையாள எண் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கும் பயிர் கடன், பி.எம். கிசான் உதவித்தொகை, வேளாண்மை விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்யப்படும் இடு பொருட்கள், கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் உரம் வாங்கிட மற்றும் பல்வேறு துறைகளில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பெற்றிட இந்த எண் அட்டை மிகவும் அவசியம். எனவே விவசாயிகள் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

