சங்கரன்கோவில் இன்று காய்கறி விலை கடும் உயர்வு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உழவர் சந்தைகளில் காய்கறி விலைகள் சராசரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உழவர் சந்தைக்கு வெளிப்புறம் விற்கப்படும் கடைகளிலும், மார்க்கெட்களிலும் காய்கறி விலைகள் ராக்கெட் விலைகளில் உயர்ந்து உள்ளது. உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 என்று விற்கப்பட்டது. ஆனால் வெளி மார்க்கெட்டில் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது. கத்தரிக்காய் உழவர் சந்தையில் ரூ.50-க்கு விற்கப்பட்டது. ஆனால் வெளி மார்க்கெட்டில் ரூ.60 முதல் 65 வரை விற்கப்பட்டது. அவரைக்காய் உழவர் சந்தையில் ரூ.35-க்கு விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் ரூ.50-க்கு விற்பனையானது.
Next Story

