புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புளியங்குடி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரம்ம உற்சவ திருவிழாவையொட்டி நேற்று இரவு புன்னையாபுரம் யாதவர் சமுதாயம் சார்பில் தெப்ப உற்சவ திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலசுப்பிரமணியனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாலசுப்பிரமணியன் தெப்ப குளத்தில் 11 சுற்றுகளாக தெப்பம் சுற்றி வந்து சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

