உயிருக்கு போராடிய முதியவர்

உயிருக்கு போராடிய முதியவர்
X
சத்தியமங்கலத்தில் சாலையோரம் உயிர்க்கு போராடிய நிலையில் படுத்து கிடந்த முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த தீரன் அறக்கட்டளை நண்பர்களுக்கு பொதுமக்கள் இடையே பாராட்டுகள் குவித்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோபிசெட்டிபாளையம் செல்லும் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உயிருக்கு போராடிய நிலையில்‌ குப்பைகளுக்குள் சாலையோரம் படுத்துக்கிடந்துள்ளார். இதை அவ்வழியாக சென்ற சமூக ஆர்வலர் ஒருவர் உடனடியாக தீரன் அறக்கட்டளை நண்பர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பின்னர் தங்களது அறக்கட்டளை சார்பில் உள்ள தீரன் ஆம்புலன்ஸை எடுத்து வந்த நண்பர்கள் அந்த முதியோரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கொண்டு அனுமதித்தனர். அந்த முதியவர் யார் யாரேனும் தூக்கி வீசி சென்று உள்ளார்கள் அல்லது அவராகவே உடல் முடியாமல் கீழே விழுந்து கிடந்தாரா என சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த தீரன் அறக்கட்டளை நண்பர்களுக்கு பொதுமக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Next Story