காஞ்சிபுரம் அருகே சரக்கு வாகனம் தீக்கிரை

காஞ்சிபுரம் அருகே சரக்கு வாகனம் தீக்கிரை
X
வாகனம் வந்தபோது, திடீர் இன்ஜின் கோளாறு காரணமாக, வாகனம் தீப்பற்றி எரிய துவங்கியது
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து 'டாடா' சரக்கு வாகனம், மாங்கால் கூட்டு சாலையில் உள்ள தனியார் கம்பெனிக்கு நேற்று காலை சென்றது. வாகனத்தை அசோக் என்பவர் ஓட்டி வந்தார். காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அண்ணா புற்றுநோய் மருத்துவமனைக்கு சற்று தொலைவில் வாகனம் வந்தபோது, திடீர் இன்ஜின் கோளாறு காரணமாக, வாகனம் தீப்பற்றி எரிய துவங்கியது. இதையடுத்து, தீ பரவுவதை அறிந்த ஓட்டுனர் உடனடியாக சாலையோரம் வாகனத்தை நிறுத்தி தப்பினார். தகவலறிந்த காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சென்ற பொன்னேரிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
Next Story