பூமி பூஜை

பூமி பூஜை
X
ரூபாய் 4 .5 லட்சம் நிதியில் பயணிகள் நிழற்குடை
மொடக்குறிச்சி வட்டம், அவல் பூந்துறை பேரூராட்சி, வார்டு எண்.8, பூவாண்டிவலசு மெயின் வீதி, அவல்பூந்துறையில் இருந்து அரச்சலூர் செல்லும் சாலையில் உள்ள செப்பு நெருஞ்சி தோட்டம் பஸ் நிருத்தம் பகுதியில் பயணிகள் நிழல் குடை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் (2024-2025) இருந்து ரூபாய் 4.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை செய்தல் நிகழ்வு 10.30 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு நிழல் குடை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தலைவர் யோக தட்சிணாமூர்த்தி உட்பட கட்சியின் நிர்வாகிகள், அவல்பூந்துறை பேரூராட்சி தலைவர், கவுன்சிலர், பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி பொறியாளர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story