அரசு மருத்துமனையில் சிறுவன் உயிரிழப்பு - பெற்றோர் தர்ணா

அரசு மருத்துமனையில் சிறுவன் உயிரிழப்பு - பெற்றோர் தர்ணா
X
சிறுவன் உயிரிழப்பு - பெற்றோர் தர்ணா: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம் மலையடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் பொன்மாறன்(4). இச்சிறுவனுக்கு கழுத்தில் சிறிய கட்டி இருந்ததால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு ஸ்கேன் எடுப்பதற்காக ஊசி போடப்பட்டதாக கூறப்படும் இந்த நிலையில் சிறுவன் திடீரென உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து தவறான ஊசி செலுத்தியதாக சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் நேற்று இரவு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பதை குறிப்பிடத்தக்கது.
Next Story