திருச்சி உறையூரில் கடன் தொல்லையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி உறையூரில் கடன் தொல்லையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X
உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை இவர். விமான நிலையம் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் அருகே தனது சகோதரர்களுடன் சேர்ந்து டிபன் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் ஸ்டீபன் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் பணத்தை திருப்பி கட்ட முடியாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஸ்டீபன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் உள்ள இரும்பு குழாயில் தூக்கிட்டு ஸ்டீபன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்தஉறையூர் போலீசார் விருந்து சென்று ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story