மூன்று முறை திருடுபோன முருகர் கோயில் உண்டியல் காணிக்கை
மூன்று முறை திருடுபோன முருகர் கோயில் உண்டியல் காணிக்கை : நான்காவது முறையாக வெல்டிங் செய்து கதவை திறந்தும் மூலவர் முருகர் கதவு பூட்டை உடைக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் வைரலாகும் வீடியோ.. கும்மிடிப்பூண்டி அடுத்த குமரன் சேரி கிராமத்தில் சுயம்பு அருள்மிகு குமரசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏழரை அடி உயர முருகன் சிலை சுயம்புவாக உருவான நிலையில் பிரதி வாரம் செவ்வாய்க்கிழமையிலும், முருகருக்கு உகந்த நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த நிலையில் தைப்பூசத்தை ஒட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் பெருந்திரளாக இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நிலையில் உண்டியல் காணிக்கை பணம் கூடுதலாக இருக்கும் என கருதி இன்று இரவு நவீன கட்டிங் இயந்திரத்துடன் கோவிலுக்கு வந்த மர்ம ஆசாமிகள் 4 பேர் இரும்பு கதவில் இருந்த நான்கு பூட்டை உடைத்துள்ளனர். மேலும் இரும்பு கதவை தீப்பொறி பறக்க அறுத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் கருவறையின் கதவை உடைக்க முயற்சித்த நிலையில் கருவறை கதவின் பூட்டை உடைக்க முடியாததால் கருவறையில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பணமும் தப்பியது. திருட்டு கும்பலும் வெறும் கையுடன் திரும்பியது. இவை அனைத்தும் கோவிலின் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் கோவிலின் உண்டியல் சூறையாடப்பட்ட நிலையில் இந்த கோவிலில் நான்காவது முறையாக திருடி சம்பவம் அரங்கேறுவது குறிப்பிடத்தக்கது.
Next Story





