அன்னதானத் திட்டம் மூலம் பயன் பெறும் பயனாளிகள் அதிகப்படுத்தப்பட்டன
மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படி 2024 2025 சட்டமன்ற அறிவிப்பின்படி திருக்கோவில்களில் மத்திய அன்னதானத் திட்டம் மூலம் பயன் பெறும் பயனாளிகள் அதிகப்படுத்தப்பட்டன சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள சோமநாத சுவாமி திருக்கோவிலில் மதியம் 50 பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அன்னதானத் திட்டமானது நூறாக உயர்த்தப்பட்டுள்ளது இதனை இந்து சமய அறநிலைய துறை மண்டலம் ஒன்று இணை ஆணையாளர் திருமதிமுல்லை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் செயல் அலுவலர் கணேஷ்குமார் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் பாபு அறங்காவலர்கள் கணேசன் பூமிநாதன் திருமதி லதா முத்து கோகுல் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த அன்னதானத் திட்டமானது பல்வேறு இந்து சமய அறநிலை துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story






