காலை பனிப்பொழிவு இருந்த நிலையில் அதற்கு போட்டியாக வாட்டி வதைத்த வெயில்

அதிகாலையில் இருந்து 9 மணி வரை கடும் பனிப்பொழிவு இருந்த நிலையில் அதற்கு போட்டியாக இன்று வெயிலும் பொதுமக்களை வாட்டி வதைத்தது 90.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது
சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலையில் இருந்து 9 மணி வரை கடும் பனிப்பொழிவு இருந்த நிலையில் அதற்கு போட்டியாக இன்று வெயிலும் பொதுமக்களை வாட்டி வதைத்தது 90.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கடுமையான பனிப்பொழிவு பெய்த நிலையிலும் வெயில் வாட்டி வதைத்தது 32.5° c வெப்பநிலை பதிவானது 90.5° பாரன்ஹீட் அளவாக வெப்ப நிலை இருந்ததால் திருத்தணி திருவள்ளூர் கனகம்மா சத்திரம் திருவாலங்காடு ஆர்கே பேட்டை பள்ளிப்பட்டு பொதட்டூர்பேட்டை ஊத்துக்கோட்டை தாமரைப்பாக்கம் செங்குன்றம் பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகாலையில் கொட்டிய பனிக்கு போட்டியாக இருந்தது காலையில் 9:00 மணி வரை நீடித்த பணி மெல்ல சூரியன் மேலே வந்ததும் பனிமூட்டம் விலகத் தொடங்கியது இருப்பினும் நண்பகலில் இருந்து கடுமையான வெயில் வாட்டி வதைத்தது திருவள்ளூர் நகரில் வீரராகவர் கோவில் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் வெயில் தாக்கத்திற்கு ஆளான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன மாலை 6 மணி வரை வெயில் மக்களை வாட்டி வதைத்தது குறிப்பிடத்தக்கது கோடை வெயில் தொடங்கும் முன்னரே வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்
Next Story