விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

X
அரியலூர், பிப்.13- அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கலைத் திருவிழா ஜெயங்கொண்டம் கே.கே.சி கல்வி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு , மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா தலைமை வகித்து, கல்வித் திறனுடன், இதர திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கூறி கலைத் திருவிழாவை தொடக்கி வைத்தார்.இந்த கலைத் திருவிழாவில், நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, இலக்கியம் மற்றும் நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில், மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகள் வெளிகாட்டினர். இதில் வெற்றிப் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், 2022}2024 வரை சிறப்பாக பணியாற்றிய சிறந்த விடுதி காப்பாளர் மற்றும் காப்பாளினிகள் 6 பேருக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி பேசினர். முன்னதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமாமகேஸ்வரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.இதற்கான ஏற்பாடுகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி காப்பாளர், காப்பாளினிகள் செய்திருந்தனர். படவிளக்கம்: ஜெயங்கொண்டம் கே.கே.சி கல்வி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா.
Next Story

