சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு பரிசு பெட்டகங்களை வழங்கினார்.

சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆதரவற்ற குழந்தைகள்  மற்றும் முதியோர்களுக்கு பரிசு பெட்டகங்களை வழங்கினார்.
X
சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு பரிசு பெட்டகங்களை வழங்கினார்.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு பரிசு பெட்டகங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது முதியோர் இல்லம் தொடங்கவோ அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலம் நடந்து கொண்டிருக்க கூடிய அதிகமாக சேர்க்கக் கூடிய அளவுக்கு இட வசதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவும் தேவையான அரசு நிதியை வழங்கவும் இத்துறைக்கு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். இத்துறை மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்காக, 36 அரசு குழந்தைகள் இல்லம் 147 தொண்டு நிறுவன இல்லங்கள் ஆகியவற்றுக்கு தேவையான உணவீட்டுச் செலவினங்களை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் கலைகளை கற்றுக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த ஆண்டு முதல் அவர்களுக்கு தொழிற் பயிற்சி,ஆற்றுப்படுத்துதல், விளையாட்டுபயிற்சி, Haryana டிராயிங் மியுசிக் போன்ற கலைகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் கட்டில் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆறாம் வகுப்பில் இருந்து மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கின்றனர்.அடுத்த ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஆட்சியில், இத்துறை புத்துணர்வு பெற்றுள்ளது. புதுமைப் பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் காலை உணவு திட்டம் என குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இன்றைய ஆய்வுக்கூடத்தில் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், தாயாருக்கும் ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.எடை குறைவாக முட்டை வழங்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.என்றார். பள்ளி மாணவர்கள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை குறித்த கேள்விக்கு? குழந்தைகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு செய்து வருகிறோம் உடனடியாக புகார் செய்ய அறிவுறுத்துகிறோம். அடங்கி இருக்கக் கூடாது பயப்படக்கூடாது என்பதை தெளிவு செய்கிறோம். புகார் தருபவர்கள் விவரம் வெளியிடப்படாது என தைரியம் மூட்டுகிறோம் இது போன்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. தயக்கம் இன்றி புகார் தருவது தற்போது அதிகரித்துள்ளது. குழந்தைகளை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கையை கல்வித் துறையும் முதல் முதலமைச்சரும் எடுத்து வருகின்றனர் . பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது,விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என்றார். விடுபட்டவர்களுக்கான மகளிர் உரிமை தொகை எப்பொழுது வழங்கப்படும் என்ற கேள்விக்கு? தகுதி உள்ள விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து துணை முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளார் அதன்படி விரைவில் வழங்கப்படும் என்றார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்கள் குறித்து பேசாமல் தனிப்பட்ட விஷயங்களை மட்டுமே பேசுகின்றனர் என அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு? திமுகவை குற்றம் சொல்வது மட்டுமே அண்ணாமலையின் நேற்று கூட அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலாக உருவ வேண்டும் என பேசி உள்ளார் எவ்வளவு தைரியம்? 1949 முதல் உள்ள இயக்கம் . தமிழ்நாடு எவ்வளவு முன்னேறி இருக்கிறது? நாமெல்லாம் சரிசமமாக சேரில் அமர்கிறோம். பெண்கள் மைக்கில் பேசுகிறோம் இந்த நிலையை உருவாக்கியது திமுக திராவிடர் கழகம் ஆகும். அவர் வரலாறு அறியாமல் பேசுகிறார் அவரை நாங்கள் பொருட்படுத்துவதில்லை அவர் வாயில் வருவதெல்லாம் பொய்" இவ்வாறு அவர் கூறினார்.
Next Story