சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாண்புமிகு சமூக நலன்பெ.கீதா ஜீவன் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு

X
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில், சமூக நல ஆணையர் திருமதி ஆர்.லில்லி,இ.ஆ.ப., அவர்கள், இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மெர்சி ரம்யா,இ.ஆ.ப., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு சத்துணவு திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், சத்துணவு மையங்கள், மாவட்ட அளவில் செயல்படும் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள், புதுமைப்பெண் திட்டம், தமிழ் முதல்வன் திட்டம், திருமண நிதி உதவி திட்டம், திருநங்கைகள் சுயதொழில் துவங்கிட மானிய திட்டம், திருநங்கைகள் அடையாள அட்டை, திருநங்கைகளுக்கான ஓய்வூதியம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், தனியார் பணிபுரியும் மகளிர் விடுதி பதிவு விவரங்கள், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், 18 வயது முடிவுற்ற பயனாளிகளின் முதிர்வுத் தொகை வழங்கப்பட்ட விவரம், மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் மற்றும் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தின் செயல்பாடுகள், மகளிர் உதவி எண், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழங்கப்பட்டு வரும் சேவைகள், முதியோர் இல்லங்கள், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த வளாகங்கள், ஒருங்கிணைந்த மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள், மகளிர் குறுகிய கால தங்கும் இல்லங்கள், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறை சார்ந்த அரசு அலுவலருடன் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டத்தில் குழந்தைகள் பிறப்பு குறித்த மருத்துவத்துறையின் புள்ளி விவரங்கள் கிடைத்தவுடன் குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து குறிப்பிட்ட கால இடைவெளியில் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதுபோல கர்ப்ப காலத்தில் பெண்களின் ஊட்டச்சத்து வளர்ச்சியினை முறையாக கண்காணித்து, அவர்களுக்கான ஊட்டசத்துக்கள் கிடைக்கச் செய்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைப் பேறு அடைவதை உறுதி செய்ய வேண்டும். மதிய உணவு திட்டத்தில் சமையல் கூடத்திற்கு தேவையான மின்சார வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படின் தொடர்புடைய அரசு துறைகளிடம் தெரிவித்து அதனை உறுதி செய்ய வேண்டும். திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தொகைகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமையால் பாதிக்;கப்படும் பெண்களுக்கு முதற்கட்டமாக அவர்களின் நகை, பணம், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தை திருமணம் தடுப்பு குறித்து தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக அவர்களுக்கு சென்றடைய அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நலக வேண்டும் என மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் தெரிவித்தார்.
Next Story

