சாத்தூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் ..... தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் ....

சாத்தூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் ..... தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் ....
X
சாத்தூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் ..... தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் ....
சாத்தூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் ..... தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் .... விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள அலுவலகப் பணியாளர்கள் வருவாய் துறை அலுவலர்கள் கிராம அலுவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசின் அரசு ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் பணி புறக்கணிப்பு செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சாத்தூர் வட்டாட்சியர் ராமநாதன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் நீர் மேலாண்மை துறை அலுவலர்கள் என ஏழு பேரை மாவட்ட நிர்வாகம் பணியை சரியாக கவனிக்கவில்லை என தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் அரசு அலுவலர்களுக்கு உரிய சலுகைகள் மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தர மறுக்கும் தமிழக அரசை கண்டித்தும் இன்று இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருவதாக போராட்ட குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தாலுகா அலுவலகத்திற்கு ஆதார் மற்றும் சான்றிதழ்கள் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக வரும் பொதுமக்கள் பயனாளர்கள் என பலரும் வந்து பணி ஏதும் நடைபெறாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
Next Story