அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் வன்கொடுமைகள் தடுக்க நடவடிக்கை தேவை மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

X
Komarapalayam King 24x7 |13 Feb 2025 9:20 PM ISTஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கல்லூரிகளில் பாலியல் வன்கொடுமைகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா சார்பில் மாவட்ட கலெக்டருக்கு மனு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கல்லூரிகளில் பாலியல் வன்கொடுமைகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா சார்பில் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்களால் ஏயற்படும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகளவில் நடைபெறுகிறது. இதனால் சிறு வயது மாணவி முதல் கல்லூரி மாணவிகள் வரை அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆகையால் மாணவிகளின் நலன் கருதி பள்ளியில் மாணவிகள் படிக்கும் அறையில் பெண் ஆசிரியர், மாணவர்களின் அறையில் ஆண் ஆசிரியர்களும் பாடம் நடத்தினால் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது கொஞ்சமாவது குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆகையால் தாங்கள் இதனை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடமும் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் தெரியப்படுத்தி இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வினை ஏற்படுத்தித் தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Next Story
