நூறுநாள் வேலைத் திட்ட சம்பள பாக்கி கேட்டு தொழிலாளர்கள் - சிபிஎம் போராட்டம்
நூறுநாள் வேலைத் திட்டத்தில் சம்பள பாக்கி வழங்கக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், செங்கிப்பட்டியில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி தலைமையில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சோலை ரமேஷ், கே.பழனிச்சாமி, கே.தமிழரசன், கே.மருதமுத்து, பி.சித்திரவேல், எஸ்.வியாகுலதாஸ், சி.ராஜாங்கம், என்.வசந்தா, வி.அஞ்சலிதேவி, டி.தமிழ்ச்செல்வன், எம்.ஜி.சரவணன், எம்.அறிவழகன், கே.முருகன், எஸ்.மலர்கொடி மற்றும் கிளை செயலாளர்கள் நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் திரண்டு ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அங்கு வந்த திருவையாறு டிஎஸ்பி அருள்மொழி, பூதலூர் வட்டாட்சியர் மரிய ஜோசப், வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவானந்தம், மற்றும் காவல்துறை உயர் அருள்மொழி அரசு, அலுவலர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடனடியாக சம்பள பாக்கி வழங்கப்படும். அனைவருக்கும் வேலை வழங்கப்படும்" என உறுதி அலுவலர்கள் அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story



