பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான பயிற்சிப்பட்டறை

பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் துறை சார்பாக, 'பங்குச்சந்தை வர்த்தகம்' என்ற தலைப்பிலான பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.  கல்லூரி முதல்வர் இரா. திருமலைச்சாமி தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் நா. பழனிவேல் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் சி.ராணி வாழ்த்திப் பேசினார். பங்குச்சந்தை வர்த்தக நிபுணர் நா.முருகானந்தம் கலந்து கொண்டு பங்குச்சந்தை, முதலீடு, லாபம் ஈட்டுதல், வியாபாரத்தில் தொழில் முனைவோராக மாறுவது, டீமேட் கணக்கு தொடங்குவது, பங்கு சந்தை உத்திகள் குறித்து  சிறப்புரையாற்றினார்.  நிறைவாக, வணிகவியல் துறை பேராசிரியர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார். இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story