தனியார் நிதி நிறுவன ஆலோசனை கூட்டத்தில் ஆர்.டி.ஓ. பங்கேற்பு

X
Komarapalayam King 24x7 |13 Feb 2025 9:40 PM ISTகுமாரபாளையத்தில் நடந்த தனியார் நிதி நிறுவன ஆலோசனை கூட்டத்தில் ஆர்.டி.ஓ. பங்கேற்றார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் கடனை திருப்பி செலுத்தமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலோசனை கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி பங்கேற்று பேசினார். இவர் பேசியதாவது: தனியார் நிதி நிறுவனங்களில் தொழில் முனைவோராக கடன் பெறும் மகளிர் தங்கள் தேவைக்காக கடன்களை பெற்று தொழில் முனைவராக உயர வேண்டும். அளவுக்கு அதிகமான கடன்களை பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாமல் விபரீத முடிவுகள் எடுக்கக் கூடாது. தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் வசூல் செய்யும் பொழுது ஏற்படும் கருத்து வேறுபாடுகளை மகளிர் சுய உதவிக் குழுவினர் காவல் நிலையங்கள் மூலமாகவும், வருவாய் துறை மூலமாகவும் தீர்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் சமுதாய பாதுகாப்பு திட்டத்திற்கு குமாரபாளையம் நகராட்சிக்கு தூய்மை பணி செய்ய சுமார் 5 லட்ச ரூபாய் செலவில் 3 மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டது.
Next Story
