தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை மூன்று பேர் கைது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் பேரில் டிஎஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் கொக்காலடி, பாமணி, அத்திமடை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது கொக்காலடி கடைத்தெரு பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த கொக்காலடி பகுதியைச் சேர்ந்த துரைசாமி( 70 )கண்ணன்( 50) தேசிங்குராஜபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(50) ஆகிய மூவரையும் திருத்துறைப்பூண்டி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Next Story