மணப்பாறையில் நகராட்சி ஒப்பந்த பணியாளா்கள் தா்னா போராட்டம்

X
மணப்பாறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளா்களாக 49 பெண்கள், 20 ஆண்கள் மற்றும் 12 வாகன ஓட்டுநா்கள் என 81 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதி வழங்கப்பட்டு வந்த ஊதியம், இந்த மாதத்தில் 12ஆம் தேதி கடந்தும் ஊதியம் வழங்கப்படவில்லையாம். மேலும் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தொழிலாளா் வைப்பு நிதியையும் ஒப்பந்தக்காரா்கள் வைப்பு நிறுவனத்திற்கு செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த தொழிலாளா்கள் வியாழக்கிழமை காலை பணிக்கு வந்த நிலையில் பணியை புறக்கணித்து நகராட்சி வாயிலில் தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள், காவல் ஆய்வாளா் குணசேகரன் மற்றும் தமிழ்நாடு நகராட்சிகள் அனைத்து பணியாளா்கள் முன்னேற்ற சங்க சிறப்பு ஆலோசகா் ஏ.பி.சரவணன் தலைமையில் நடந்த பேச்சு வாா்த்தையில், காலை 11 மணிக்குள் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு அவரவா் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும் என உறுதியளித்தனா். அதனை தொடா்ந்து தொழிலாளா்கள் பணிக்கு திரும்பினா்
Next Story

