திருச்சி: சாலை விபத்தில் காவலா் உயிரிழப்பு

X
சமயபுரம் பகுதியை சோ்ந்த ராஜா (எ) ரியாஸ். இவா், துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை பனமங்கலம் பகுதியில் தான் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சாலையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், சமயபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து கொள்ளிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Next Story

