சங்கரன்கோவில் அருகே சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் மின்சாரம் தாக்கி படுகாயம்

சங்கரன்கோவில் அருகே சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் மின்சாரம் தாக்கி படுகாயம்
X
சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் மின்சாரம் தாக்கி படுகாயம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே செந்தட்டியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் ராஜகுரு இவர் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். நேற்று மாலையில் அங்குள்ள ஒரு மரத்தில் சீரியல் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மெயின் லைனில் சீரியல் செட் உரசி மின்சாரம் தாக்கியதில் ராஜகுரு படுகாயம் அடைந்தார் . உடனடியாக அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து கரிவலம் வந்த நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story