அதிமுக பிரமுகர் தற்கொலை போலீசார் விசாரணை

X
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே மாதவரம் மண்டலம் 23 வது வட்டம் புழல் காவாங்கரை பாரதிதாசன் தெரு சார்ந்தவர் சபாபதி 47 இவருக்கு திருமணமாகி பால லட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் இந்நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் நீண்ட நேரம் கதவு திறக்காத அதனால் அவரது மனைவி பால லட்சுமி கதவைத் திறந்து பார்த்தபோது மின்விசிறியில் நைலான் கையிறால் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்டு செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்
Next Story

