கத்தி முனையில் நகை பறிப்பு சிறுவன் உட்பட இருவர் கைது

கத்தி முனையில் நகை பறிப்பு சிறுவன் உட்பட இருவர் கைது
X
ஸ்ரீபெரும்புதூரில் கத்தி முனையில் நகை பருப்பில் ஈடுபட்ட சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை
திருவண்ணாமலை மாவட்டம், வீரலுார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 30. ஸ்ரீபெரும்புதுாரில் தங்கி, கட்டுமான தொழில் செய்து வருகிறார். இம்மாதம் 2 ம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு, திருவண்ணாமலை செல்வதற்காக, ஸ்ரீபெரும்புதுார் மேல்நிலைப்பள்ளி சந்திப்பில் இருந்து, சர்வீஸ் சாலை வழியாக, ராஜிவ்காந்தி நினைவகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றார். ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை அருகே சென்ற போது, இருக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், முருகனை மடக்கி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளனர். இதையடுத்து அவரிடமிருந்து 3.5 சவரன் தங்க செயின், 20,௦௦௦ ரூபாய் பணம், சாம்சங் மொபைல் உள்ளிட்வைகளை பறித்து அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த, முருகன் அளித்த புகாரின்படி, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, கத்தி முனையில் நகை, பணம், போன் பறித்த, சென்னையை சேர்ந்த அஜய், 23 மற்றும் 17 வயது சிறுவனை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சஞ்சை என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story