வாணியம்பாடியில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு.

வாணியம்பாடியில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து  ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு.
X
வாணியம்பாடியில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு. சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதிய பள்ளி பேருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 46 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து 46 பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, பள்ளி பேருந்து ஓட்டுநர் ஜாவித் என்பவர் வாணியம்பாடி நோக்கி பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, திடீரென பள்ளி வாகன ஓட்டுநர் ஜாவித்திற்கு வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது, உடனடியாக பள்ளி பேருந்து உதவியாளர் சம்பத் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து சென்ற பள்ளி வாகன ஓட்டுநர் ஜாவித்தை மீட்டு சிகிச்சையிற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அதனை தொடர்ந்து இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 46 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பத்திரமாக மீட்டு, மாற்று வாகனத்தில் அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விபத்துக்குள்ளான பள்ளி பேருந்தை சாலையில் இருந்து அப்புற்படுத்திய நிலையில், இவ்விபத்து குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்... இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பால் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story