கோவை: எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நகல் எரிப்பு போராட்டம் !

X
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று மாலை மாவட்ட தலைவர் முகமது இஷாக் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். திடீரென அவர்கள் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நகலை தீ வைத்து எரித்தும், கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில பொருளாளர் முஸ்தபா, நிர்வாகிகள் அப்துல் கரீம், சாகுல் ஹமீது, இப்ராஹிம் பாதுஷா, சிவக்குமார், அப்துல் ரஹீம், மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

