பலியான ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி

X
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கோவை குண்டுவெடிப்பில் பலியான அப்பாவி பொதுமக்களுக்கும் மற்றும் புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு இந்து மக்கள் கட்சி மாநிலத் தொண்டர் அணி தலைவர் மோகன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்கள் வீர இந்து பேரமைப்பு நிறுவன தலைவர் காவி முத்துராஜ், அகில இந்திய இந்து மகா சபா தேசிய செயலாளர் ரங்கசாமி, வர்த்தக அணி மாநில அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார், தொண்டரணி மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், மாநகரத் தலைவர் மணிமாறன் மற்றும் பால்பாண்டி, வேலாயுதம், மகேந்திரன், சரவணகுமார், கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

