வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆண்டு விழா நடைபெற்றது

வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆண்டு விழா நடைபெற்றது
X
அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆண்டு விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆண்டு விழா நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் மாடசாமி மற்றும் தென்காசி முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நடன நிகழ்ச்சிகளும் பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Next Story