குப்பை அள்ளும் வாகனம் நடுரோட்டில் பழுதாகி நின்றதால் தள்ளிச்செல்லும் நிலை ஏற்பட்டது

குப்பை அள்ளும் வாகனம் நடுரோட்டில் பழுதாகி நின்றதால் தள்ளிச்செல்லும் நிலை ஏற்பட்டது
X
பழனி நகராட்சி குப்பை அள்ளும் வாகனம் நடுரோட்டில் பழுதாகி நின்றதால் தள்ளிச்செல்லும் நிலை ஏற்பட்டது. தைப்பூசத் திருவிழா நடந்துவரும் நிலையில், குப்பை அள்ளும் வாகனங்கள் முறையாக பராமரிக்கப் படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது‌.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். அதிகளவில் பக்தர்கள் வருவதால் வழக்கத்தை விட பலமடங்கு குப்பைகள் சேரும் என்பதால் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி நகராட்சியில் சிறப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. இதன்மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தைப்பூச சிறப்பு பணிகள் என தனியாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டும் தைப்பூச திருவிழாவிற்கு என கூடுதல் தூய்மை பணியாளர்கள், பிளீச்சிங் பவுடர், குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் தூய்மை பணிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான உபகரணங்கள் என சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் பழனி நகராட்சிக்குச் சொந்தமான குப்பை அள்ளும் வாகனம் ஒன்று இன்று காலை துப்புரவு பணியின் போது பழுதாகி நடுரோட்டில் நின்றது‌. பழுதாகி நின்ற குப்பைகளை சேகரிக்கும் வாகனத்தை துப்புரவு பணியாளர்கள் தள்ளி செல்லும் நிலை ஏற்பட்டது. தைப்பூசத் திருவிழா துவங்குவதற்கு முன்பே குப்பைகளும் வாகனங்களை முறையாக பராமரித்து தயாராக வைத்திருக்க வேண்டிய குப்பை அள்ளும் வாகனம் நடுரோட்டில் பழுதாகி நின்றநிலையில் முறையாக பராமரிப்பு பணிகள் மோற்கொண்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Next Story