சிறு சமுதாயக்கூடம், புதிய நாடக மேடை திறப்பு விழா

குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பங்கேற்பு
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா தோகைமலை கிழக்கு ஒன்றியம் புத்தூர் ஊராட்சி நடுப்பட்டியில் சிறு சமுதாயக்கூடம் மற்றும் வேங்கடத்தாம் பட்டியில் புதிய நாடக மேடை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் புத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் புழுதேரி அண்ணாதுரை மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story