பண்ருட்டி: கல்லூரியில் காவல் துறையினர் விழிப்புணர்வு

X
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS மற்றும் கடலூர் மாவட்ட CWC கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நல்லதுரை அறிவுறுத்தலின்படி பண்ருட்டி அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் P. கவிதா மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு இணைய வழி குற்றங்கள் பற்றி விளக்கப்பட்டது. மேலும் OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், Online ரம்மி, போலியான App களில் பெறும் கடன்கள், போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள் குறித்து காணொளி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது. மேலும் சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளிக்கபட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கல்லூரி முதல்வர் S.சவரிராஜ், துணை முதல்வர் G.கிருஷ்ணமூர்த்தி, NSS Programme Officer M.அருள்ராஜ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 250 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

