ஆழ்வார்குறிச்சியில் கோரக்க நாதர் கோயிலில் சிறப்பு பூஜை

X
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற கோரக்க நாதர் கோயில் உள்ளது. இங்கு பௌர்ணமி அன்று நடைபெறும் பூஜையில் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த நிலையில் நேற்று பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு பால், மஞ்சள், சந்தன, குங்குமம், இளநீர், தேன் உள்ளிட்ட 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்களும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆழ்வார்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

