ஆலங்குளத்தில் பெண்ணிடம் நகை திருடியவர் கைது

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி வைத்தியலிங்க புரத்தைச் சேர்ந்த சொர்ணம் என்பவரின் முகத்தை மூடி 18 கிராம் தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆலடிப்பட்டியை சேர்ந்த சண்முகவேல் என்பவர் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை இன்று ஆலங்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

