திருச்செங்கோட்டில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்

திருச்செங்கோட்டில் அதிமுக தெருமுனைப் பிரச்சாரம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாவட்ட அம்மா பேரவை மற்றும் திருச்செங்கோடு நகரக் அதிமுக சார்பில் 10 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனை விளக்கம் மற்றும் திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு சீர்கேடு, நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை முன்பு நாமக்கல் மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான தங்கமணி மற்றும் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் மருத்துவர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசின் நிர்வாக சீர்கேடு மற்றும் சட்ட ஒழுங்கு குறித்தான தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி கூறும் போது எடப்பாடியாரின் உத்தரவின் பேரில் தமிழக முழுவதும் திமுகவின் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் நிர்வாக சீர்கேட்டை மக்களிடம் எடுத்து கூறும் வகையிலும், அதிமுக 10 ஆண்டுஆட்சி காலத்தில் மக்களுக்கு செய்துள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கும்வகையில் தெருமுனைப் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த நான்காண்டு திமுக அரசின் ஆட்சி காலத்தில் எல்லா தரப்பு மக்களும் கஷ்டப்படும் நிலையே உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெற்று விட்டோம் 2026லும் தாங்கள்தான் ஆட்சிக்கு வர போகிறோம் என்ற தலைகனத்தில் திமுகவினர் இருக்கின்றனர். இதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு நல்ல குடிநீர் வழங்க மேட்டூர் அணையிலிருந்து சிறப்பு திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது அண்ணா திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம். திமுக ஆட்சி காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தினசரி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடித்து நீர் வழங்கப்பட்டு வருகிறது. திருச்செங்கோடு பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என திமுக அரசு திட்டம் கொண்டு வருகிறது. கழிவு நீரை சுத்தரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் ஆற்று ஓரப் பகுதிகளில்சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை சுத்தம் செய்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஆற்றில் விட்டால் அது பயனுள்ளதாக இருக்கும். மக்கள் வசிக்கும் இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் அந்தத் திட்டத்தை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. மக்கள் இல்லாத பகுதியில அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ள பகுதியில் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த தான் திமுக ஆட்சிக்கு வந்ததா என கேள்வி எழுப்பினார். திருச்செங்கோடு சுற்றுவட்டச் சாலை, சங்ககிரி திருச்செங்கோடு சாலை விரிவாக்க பணிகள் எல்லாம் அதிமுகஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுக தான் கொண்டு வந்ததை போல் விழா நடத்திக் கொண்டிருக்கின்றனர். திமுகவினர் பதவி போதையில் இருக்கின்றார்கள். புதிதாக பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக மக்களிடையே கொண்டு செல்கின்றனர். அதிமுகவின் ஆதரவோடு பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் தற்போது அதிமுகவை தூக்கி எறிந்து பேசி வருகின்றனர். அதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். மக்கள் உங்களை மண்ணைக் கவ்வும் அளவிற்கு பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதி அண்ணா திமுகவின் கோட்டை என நிரூபிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு. இதனை தொடர்ந்து திருச்செங்கோடு நான்கு ரத வீதிகள் வீதிகளிலும் நடந்து சென்று பொது மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி திமுகவின் ஆட்சி அவல நிலைகளை குறித்தும்அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் எடுத்துரைக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் சரோஜா பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே பி பி பாஸ்கர் நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், சேவல்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
Next Story